திண்டுக்கல் : 'மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் திண்டுக்கல்லில் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது' என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் ஏப்.30 வரை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் உளுந்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5828 எக்டேரில் உளுந்து சாகுபடியாகிறது.கொள்முதல் செய்ய உள்ள ஒரு குவிண்டால் உளுந்தில் நியாயமான சராசரி தரத்தின் படி இதர பொருட்கள் கலப்பு 0.10 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதம், தேசமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் இருக்கலாம். குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டால் ரூ.6000 க்கு கொள்முதல் செய்யப்படும்.
தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகள் அசல் சிட்டா, ஆதார், வங்கி பாஸ்புக் நகலுடன் வர வேண்டும். விவரங்களுக்கு திண்டுக்கல்லுக்கு 99409 25095, பழநிக்கு 86108 85187 ல் பேசலாம் என, தெரிவித்தார்.