உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது.
நிர்வாகக்குழு தலைவர் பாலகிருஷ்ணன், தாளாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர் சின்னன் கலந்து கொண்டனர். முதல்வர் ரவி வரவேற்றார். 'தேசபக்தியின் தலைமகன் நேதாஜி' என்ற தலைப்பில்சுவாமிநாதன் பேசினார். துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தனர்.