மதுரை : இரும்பு விலை திடீர் உயர்வுக்கு தென்மதுரை இரும்பு கிரில் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மதுரையில் இச்சங்க கூட்டம் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுந்தரேஸ்வரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முனியாண்டி வரவேற்றார். நிர்வாகிகள் கூறியதாவது: எப்போதும் இல்லாதளவிற்கு தற்போது இரும்பு விலை உயர்ந்து உள்ளது. இரும்பு கிரில் தொழில் செய்யும் நிறுவனங்கள் தற்போது நஷ்டமடைந்து உள்ளன. தொழிலாளர்கள்வேலையின்றியுள்ளனர்.மத்திய, மாநில அரசுகள்தலையிட்டு இரும்பு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இத்தொழில் வளர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றனர்.