மதுரை வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை ரத்து செய்த கலெக்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
03:15

மதுரை : மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ததால், கலெக்டர் அன்பழகனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார்.



அதில், 'தங்கள் மீது ஏன் பார்லிமென்டில் உரிமை மீறல் பிரச்னையை கொண்டுவரக்கூடாது' என கேள்வி எழுப்பியுள்ளார்.இக்குழுவின் தலைவராக வெங்கடேசன் எம்.பி., செயலாளராக கலெக்டர் அன்பழகன் உள்ளனர். மத்திய அரசின் 41 துறைகள் சார்ந்த வளர்ச்சிதிட்டங்கள் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை இக்குழு கூடி விவாதிக்க வேண்டும். இறுதியாக செப்.,ல்கூட்டம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு நடக்க இருந்த இந்த ஆண்டின் முதல் கூட்டம் திடீரென ரத்தானது.


பேட்டியளித்த குழுதலைவர் சு.வெங்கடேசன், இணை தலைவர் விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர், உறுப்பினர் தி.மு.க., எம்.எல்.ஏ., சரவணன், 'உள்ளூர் அமைச்சர்களின் மிரட்டலுக்கு பயந்து கூட்டத்தை கலெக்டர் ரத்து செய்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் கலெக்டர் மீது பார்லிமென்டில் உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்' என்றனர்.கலெக்டர் அன்பழகனிடம் விளக்கம்கோரி வெங்கடேசன் எம்.பி., ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.



அதில் தெரிவித்துள்ளதாவது:இக்குழு கூட்டம் 2020 செப்.7ல் நடந்தது. அடுத்த கூட்டத்தை டிச.7க்குள் நடத்தி இருக்க வேண்டும். நேரிலும் கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால் தாங்கள் கூட்டவில்லை. இறுதியாக ஜன.23ல் கூட்ட வேண்டுமென கடிதம் அனுப்பினேன். மத்திய துறை செயலர், தமிழக தலைமை செயலருக்கும் நகல் அனுப்பினேன். இதனால் ஜன.23ல் கூட்டம் நடத்தப்படும் எனஅறிவித்த தாங்கள், விவாதிக்கப்பட வேண்டிய 126 பக்க திட்ட விபர அறிக்கையையும் கொடுத்தீர்கள்.



தலைவர், உறுப்பினர்கள் கூட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் முந்தைய நாள் மாலை கூட்டத்தை ரத்து செய்தீர்கள்.விதிமுறைப்படி தலைவர் ஒப்புதலின்றி கூட்டத்தை ரத்து செய்யக்கூடாது. தன்னிச்சையாக செயல்பட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். எனது கடமையை நிறைவேற்ற விடாமல் தடுத்து இருக்கிறீர்கள். இது அகில இந்திய பணி நன்னடத்தை விதிக்கு எதிரானது. தங்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கக் கூடாது. பார்லிமென்டில் உரிமை மீறல் பிரச்னையை ஏன் கொண்டுவரக் கூடாது. கூட்டம் நடத்த செலவிடப்பட்ட தொகையை ஏன் தங்களிடம் வசூலிக்கக்கூடாது.



7 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.அன்பழகன் கரூரில் கலெக்டராக இருந்தபோது அத்தொகுதி காங்., எம்.பி., ஜோதிமணியுடன் மோதல் போக்கு இருந்தது. தற்போது மதுரையிலும் அது தொடர்கிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X