விதிமீறல் ஆட்டோக்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
03:15

மதுரை : விதிமீறல் ஆட்டோக்களின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய அல்லது ரத்து செய்ய மாவட்ட அளவிலான அதிகாரிகள் பரிசீலிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.



இது நிரந்தர தீர்வு காண வேண்டிய பெரிய பிரச்னை. இது தொடர்பாக மற்றொரு தகுந்த வழக்கில் ஆராயப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில் ஆட்டோக்களில் விதிகளை மீறி இருக்கைகளை மாற்றம் செய்கின்றனர். மூன்று பயணிகளை மட்டுமே ஆட்டோக்களில் ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால் பல ஆட்டோக்களில் விதிகளை மீறி 12 பேரை அனுமதிக்கின்றனர். இதனால் விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



மதுரையில் 2019 வரை 126 ஆட்டோக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5017 ஆட்டோக்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ரூ. 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோக்களில் விதிமீறல் தொடர்கிறது. போக்குவரத்து விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை செயலர், கமிஷனர், மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு டிராபிக் ராமசாமி குறிப்பிட்டார்.



தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு: விதிமீறல் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய அல்லது ரத்து செய்ய மாவட்ட அளவிலான அதிகாரிகள் பரிசீலிக்க போக்குவரத்துத்துறை கமிஷனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது நிரந்தரத் தீர்வு காண வேண்டிய பெரிய பிரச்னை. இது தொடர்பாக மற்றொரு தகுந்த வழக்கில் ஆராயப்படும். இவ்வழக்கை முடிக்கிறோம் என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X