ஆண்டிபட்டி : தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் புதிதாக பயன்பாட்டிற்கு வந்துள்ள தீ என்ற அலைபேசி செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்யும் முறை, தீ விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் முறைகளை ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன், பொதுமக்களுக்கு விளக்கினார். கடமலைக் குண்டு மயிலாடும்பாறையில் நடந்த தீ அலைபேசி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி மற்றும் பணியாளர்கள், பொதுமக்களுக்கு விளக்கினர். அவசர காலங்களில் தீ செயலியை பயன்படுத்துவது குறித்து மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருஷநாடு, மந்திச்சுனை, மூலக்கடை கிராமங்களில் அறிவிப்பு பலகை வைத்து துண்டு பிரசுரம் வழங்கினர்.--