குழந்தை இயேசு ஆலய தேர்பவனி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
குழந்தை இயேசு ஆலய தேர்பவனி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
03:49

சாத்துார் : சாத்துார் அருகே ஒத்தையால் குழந்தை இயேசு ஆலய விழா தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



இவ் ஆலய விழா ஜனவரி 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட தலைமை செயலாளர் ஜான் திரவியம் ,பாதிரியார் ஜெயராஜ் கொடியேற்றினர். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது.2ம் நாள் பாதிரியார் மிக்கேல்ராஜ், தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரையும் நடந்தது. 3ம் நாளான நேற்று மாலை 6:30 மணிக்கு திருச்சி எம். எஸ். எப்.எஸ். சபை ஜோசப், அல்போன்ஸ், அருள் பிரான்சிஸ், மைக்கேல், தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து மிக்கேல் அதிதுாதர், குழந்தை இயேசு, ரோஜா மாதா, திரு உருவம் மூன்று தேர்களில் வீற்றிருக்க மின் விளக்கு ஜொலிக்க தேர்பவனி நடந்தது. திராளானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X