சென்னை: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள, இரண்டு பூங்காக்களை, நேற்று முன்தினம், முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.சென்னை மாவட்டம், கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலையில், 6.83 ஏக்கர் பரப்பளவில், தமிழகத்தின் மாநில மலரான, செங்காந்தள் மலர் பெயரில், செங்காந்தள் பூங்கா, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நிலத்தில், 5 கோடி ரூபாய் செலவில், தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில், இரண்டு மிகப்பெரிய உட்புற தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பம்சமாக, 1930 - - 1940ம் ஆண்டு காலகட்டத்தில், இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட, ராட்சத இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வைத்து, அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பூங்காக்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில், காணொளி காட்சி வழியே திறந்து வைத்தார்.