திருவொற்றியூர்: இரு வேறு இடங்களில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.சென்னை, திருவொற்றியூர், கிராம தெரு, சடையங்குப்பம் பாட்டையில், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான, இரண்டு அடுக்கு மாடி கட்டடம் உள்ளது. இதற்கு, மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.ஆறுமுகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும், அனுமதி பெறவில்லை. இதனால், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவுப்படி, விதிமீறிய கட்டடத்திற்கு, நேற்று காலை, சீல் வைக்கப்பட்டது.திருவொற்றியூர், காலடிப்பேட்டை, வடக்கு மாட வீதி, வீரராகவன் தெருவில், ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கட்டடமும், மாநகராட்சியின் திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது.இவருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அனுமதி பெறாமல் கட்டட பணிகள் மேற்கொண்டதால், உதவி செயற்பொறியாளர் நக்கீரன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், கட்டடத்திற்கு, 'சீல்' வைத்தனர்.