சென்னை: கைவினை திறனால் அலங்கரிக்கப்பட்ட, பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய, நான்கு வகையான வைர நகைகளை, கீர்த்திலால்ஸ் ஜுவல்லரி அறிமுகப்படுத்தியுள்ளது.சென்னை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலையில், கீர்த்திலால்ஸ் ஜுவல்லரி வைர நகை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், கைவினைத்திறனால் அலங்கரிக்கப்பட்ட, பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய, 'மெலஞ்ச், சிண்டில்லா', வெர்ஸ்டேயில், டேங்கிள்' என்ற பெயரில், நான்கு வகையான வைர நகைகளை, நேற்று அறிமுகப்படுத்தியது.இதில், வளையல், நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம், காதணி போன்ற, பல வைர நகைகள் உள்ளன.வளையல் மேல் இருக்கும் வைர கற்கள் பதித்த செயினை பிரித்து எடுத்து, வளையல் தனியாக, பிரேஸ்லெட் தனியாக அணியும் வகையில், நகைகள் உள்ளன.நெக்லசை இரண்டாக பிரித்து, இரு செயினாக அல்லது பிரேஸ்லெட்டாக அணியும் வகையிலும், மோதிரத்தை காதணியாக மாற்றி அணியும் வகையிலும், வைர நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.மேலும், வெளிச்சத்தில் வைர கற்கள் நடனமாடுவது போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய வளையல்களையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.இதுகுறித்து, நிறுவன இயக்குனர் சூரத்சந்தகுமார் கூறுகையில், ''இந்தியாவில் முதல் முறையாக, கைத்திறனால் அலங்கரிக்கப்பட்ட, பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய, நான்கு வகை வைர நகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.''வைர நகை விற்பனை, பிப்., 6ம் தேதி வரை, ஆழ்வார்பேட்டை கிளையில் நடக்கும். பிப்., 7 முதல், அண்ணாநகர் கிளையில் விற்பனை தொடங்கும்,'' என்றார்.