சென்னை: மிகவும் அரிதான, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த இதய கட்டியை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை டாக்டர்கள், வெற்றிகரமாக அகற்றி, 64 வயது மூதாட்டியை காப்பாற்றியுள்ளனர்.
சென்னை, நந்தனம், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தில்லை வள்ளல் அளித்த பேட்டி:சென்னையைச் சேர்ந்த, 64 வயது மூதாட்டிக்கு, மூட்டு உணர்வின்மை, தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளுடன், எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பக்கவாதம்அவரை பரிசோதனை செய்ததில், கடுமையான பக்கவாதம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், ரத்த சோகை, கரோனரி தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகளும் இருந்தன.மேலும், 'ஏட்ரியல் மைக்ஸோமா' என்ற இதய கட்டி, 2.7 செ.மீ., அளவில் இருந்தது கண்டறியப்பட்டது. இது, ஆண்டுக்கு, 2 கோடி நபர்களில் ஒருவருக்கு ஏற்படும்.இவற்றிற்கு முறையாக சிகிச்சை அளிக்கவிட்டால், மாரடைப்பு, பெருமூளை சிதைவு, பக்க வாதம் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.இந்த ஏட்ரியல் மைக்ஸோமாவுக்கு, இதுவரை மருத்துவ சிகிச்சை கண்டறியப்படவில்லை. ஸ்ட்ரோக், இதய செயலிழப்பு, கார்டியாக் அரித்மியா போன்ற சிக்கல்களுக்கு மட்டுமே, மருந்து சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.நலமுடன் இருக்கிறார்
அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றுவது மட்டுமே, சிறந்த நெறிமுறை.எனவே, மிகவும் அரிதான, உயிருக்கு ஆபத்தான இதய கட்டியை, எங்கள் மருத்துவமனை டாக்டர்கள், சரியான நேரத்தில் கண்டறிந்து, அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றினர். மருத்துவமனையில் உள்ள, நவீன உபகரணங்கள் உதவியுடன், அறுவை சிகிச்சை வாயிலாக, நோயாளியை காப்பாற்றியுள்ளோம். அவர், தற்போது நலமுடன் இருக்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.