கடலுார்: கடலுார் அடுத்த தென்னம்பாக்கம் அழகு முத்தையனார் கோவில் கும்பாபிேஷகம் வரும் 1ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி, வரும் 29ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம் நடக்கிறது. 30ம் தேதி காலை 8:30 மணிக்கு மூர்த்தி ேஹாமம், யாக சாலை பிரவேச பூஜை நடக்கிறது.இரவு 7:30 மணிக்கு யாக சாலை பிரவேச முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 31ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், புதிய விக்ரகங்கள் கண் திறத்தல், பரிவார மூர்த்திகள் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி காலை 4:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து 9:00 மணிக்கு யாத்ராதானம் புறப்பாடாகி 9:45 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.