கடலுார்; இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு பா.ம.க., கண்டனம் தெரிவித்துள்ளது.ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம், கடலுாரில் பா.ம.க., அலுவலகத்தில் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் 29ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது. தி.மு.க., தலைமையின் துாண்டுதலின் பேரில், கடலுார் கிழக்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் இடஒதுக்கீட்டு போராட்டம் குறித்து அவதுாறாக பேசி வருவதற்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்டச் செயலாளர்கள் கோபிநாத், ரவிச்சந்திரன், கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.