கடலுார்: அகில இந்திய பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சங்க மாநில மாநாடு கடலுாரில் நடந்தது.மாநிலத் தலைவர்கள் தமிழ்ச்செல்வன், அறவாழி தலைமை தாங்கினர். ஆலோசகர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் முதன்மைப் பொது மேலாளர் ஜெகதீசன், கவுரவ விருந்தினர்கள் அகில இந்திய பொதுச் செயலாளர் சிவக்குமார், தென்மண்டல அமைப்புச் செயலாளர் துரை அரசன் பேசினர். தீபக் தயாள், கீதாஞ்சலி, சுப்ரதா சாட்டர்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், 4ஜி அலைக்கற்றையை பி.எஸ்.என்.எல்.,க்கு வழங்காதால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது.இதற்கான அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரம் டில்லியில் கூடும் அனைத்து சங்கங்களின் பொதுச் செயலர்கள் கூட்டத்தில் அறிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.