தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: சேலம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:24

சேலம்: பள்ளி குழந்தைகளிடம் ஆய்வு மனப்பான்மையை அதிகரித்து, குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்க, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடக்கும் இப்போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், குழந்தை விஞ்ஞானிகளாக கவுரவிக்கப்படுகின்றனர். நடப்பு கல்வியாண்டில், கொரோனா சூழலால், ஆன்லைன் மூலம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க, ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட அளவில், அறிவியல் மாநாட்டில், 87 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலிருந்து, 15 ஆய்வறிக்கைகள், மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன. ஜன., 20 முதல், 22 வரை இணையவழியில் நடந்த மாநில மாநாட்டில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், 311 ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். அதில், 30 ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு, அகில இந்திய அளவில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விஷால், ரவீன்பிரகாஷ் குழுவினர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, வழிகாட்டி ஆசிரியர் முனுசாமி, தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் பாராட்டினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X