இன்று தி.மு.க., பிரசாரம்; ராஜய்சபா எம்.பி., பங்கேற்பு | சேலம் செய்திகள் | Dinamalar
இன்று தி.மு.க., பிரசாரம்; ராஜய்சபா எம்.பி., பங்கேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:26

சேலம்: சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை: சங்ககிரி சட்டசபை தொகுதியில், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' தலைப்பில், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம், ஜன., 24ல்(இன்று) நடக்கிறது. கட்சியின் துணை பொதுச்செயலர், எம்.பி., செல்வராஜ் பேசுகிறார். கத்தேரி, சாமியார்பாளையத்தில், காலை, 8:00 மணிக்கு, மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவுடன், பிரசாரம் தொடங்குகிறது. புள்ளாகவுண்டம்பட்டியில் மக்கள் கிராம சபா; மொத்தையனூர் புதுவளவில் கொடியேற்றுதல்; சங்ககிரியில், இளைஞர், இளம்பெண்களுடன் கலந்துரையாடல் நடக்கிறது. தொடர்ந்து, தேவகவுண்டனூர், வடுகப்பட்டி, பி.ஆர்.எம்., திருமண மகால், நடுவனேரி ஊராட்சியில், தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. மக்கள், மாநில, மாவட்ட இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலர்கள், சார்பு அணியினர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X