கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அருகே, திருமணமான ஏழு மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார். திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டியை சேர்ந்தவர் திருகுமரன். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்த வித்யா, 21, என்பவருக்கும், கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தனியார் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக வித்யா பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதமாக, தீராத வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் வேலம்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான ஏழு மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், பர்கூர் டி.எஸ்.பி., தங்கவேல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.