கிருஷ்ணகிரி: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ்குமார், 36, லாரி டிரைவர்; அகமதாபாத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக விழுப்புரத்துக்கு, கன்டெய்னர் லாரியில் ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாகங்களை ஏற்றிச்சென்றார். கடந்த, 21 இரவு, 9:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - மத்தூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே, உணவு சாப்பிட லாரியை நிறுத்தினார். அப்போது, அங்கு வந்த இருவர், அவரிடம் தகராறு செய்து, லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். நேற்று முன்தினம் மத்தூர் போலீசில் கமலேஷ்குமார் புகார் செய்தார். விசாரணையில், பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக், 27, மற்றும் கூலித்தொழிலாளி நவீன்குமார், 26, ஆகியோர் லாரி கண்ணாடியை உடைத்தது தெரிந்து, இருவரையும் கைது செய்தனர்.