கல்லூரி மாணவி உட்பட மூன்று பேர் திடீர் மாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:39

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல்லூரி மாணவி உட்பட மூன்று பேர் மாயமாகி உள்ளனர். ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார்; கடந்த, 17ல் காலை கல்லூரி செல்வதாக கூறிச்சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய், நேற்று முன்தினம் சிங்காரபேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், ஆண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ், 20, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து, வெங்கடேஷ் மற்றும் மாயமான மாணவியை தேடி வருகின்றனர். தளி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்த விவசாயி நாராயணப்பா, 48; கடந்த, 20 இரவு, விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால், நேற்று முன்தினம் அவரது மகன் ராஜேந்திரா, 24, புகாரின்படி, தளி போலீசார், மாயமான நாராயணப்பாவை தேடி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த, மயிலாடும்பாறையை சேர்ந்த கவியரசு, 43, என்பவரின் மகள் நித்யா, 21. பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்தார். கடந்த, 21ல் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கவியரசு, நேற்று முன்தினம் ஊத்தங்கரை போலீசில் அளித்த புகாரில், திருச்சியில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றும், காரப்பட்டு காலனியை சேர்ந்த இன்பரசன், 22, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான நித்யா மற்றும் இன்பரசனை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X