திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், தை கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாகிரி நாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த கம்பத்து இளையனார் சன்னதியில், அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், கொரோனா ஊரடங்கால், தனித்தனியாக காவடி ஏந்தி, மாடவீதி வலம் வந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். இதேபோன்று, சோமாசிபாடி சுப்பிரமணியர் கோவில், வில்வாரணி சுப்பிரமணியர் கோவில், செய்யாறு பட்சீஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் கோவில்களில், தை கிருத்திகையை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.