அருணாசலேஸ்வரர் கோவில் 4ம் ஆண்டு வருஷாபிஷேகம் | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
அருணாசலேஸ்வரர் கோவில் 4ம் ஆண்டு வருஷாபிஷேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:43

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நான்காம் ஆண்டு வருஷாபிஷேக விழா, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 2017 பிப்.,6ல், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நான்காம் ஆண்டு கும்பாபிஷேக வருஷாபிஷேக விழா தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, 6:00 மணிக்கு, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், முதல்கால யாக சாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இன்று, காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள் மற்றும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு, வினாயகர் மற்றும் சந்திரசேகரர் மாடவீதி உலா நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X