நாகப்பட்டினம்: ரயில் முன் பாய்ந்து, விவசாயி தற்கொலை செய்து கொண்டார். நாகை, சட்டையப்பர் மேல வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 58; விவசாயி. மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கு, திருக்குவளை அடுத்த மோகனம்பாள்புரத்தில், 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சாகுபடி செய்திருந்த பயிர்கள், மழையால் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரமேஷ்பாபு மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஆவராணி என்ற இடத்தின் அருகே, எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து, ரமேஷ்பாபு தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.