ஈரோடு: பெருந்துறையில், சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றம், ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து, 62; பிளாஸ்டிக் கவர், அட்டைகளை எடைக்கு போட்டு, அதில் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் பெருந்துறையில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த, ஆறு வயது சிறுமிகள் இருவரை, 2019 அக்., மாதம் மிட்டாய் கொடுத்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். புகாரின்படி பெருந்துறை போலீசார், சிறுமிகளிடம் விசாரணை நடத்தி, இரு போக்சோ வழக்குகளில், தங்கமுத்துவை அக்.,??ல் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தற்போதும் சிறையில்தான் உள்ளார். இவ்வழக்கு விசாரணை, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். தங்கமுத்துவுக்கு தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்த அவர், ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.