ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் ராகுல் இன்று தேர்தல் பிரசாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:49

ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், காங்., முன்னாள் தலைவர் ராகுல், இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருப்பூரில் தங்கி உள்ள ராகுல், காலை, 10:00 மணிக்கு ஊத்துக்குளி, 10:30 மணிக்கு பெருந்துறையில் வரவேற்பில் பங்கேற்று பேசுகிறார். அங்கிருந்து காலை, 11:00 மணிக்கு ஈரோடு வரும் ராகுல், அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே முன்னாள் முதல்வர் காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளுக்கும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். அங்கிருந்து, பன்னீர்செல்வம் பூங்கா வந்து, அங்குள்ள ஈ.வெ.ரா., முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பேசுகிறார். அங்கிருந்து, அரச்சலூர் வழியாக ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபம் வளாகம் செல்கிறார். அங்கு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கு, நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுடன் உணவு உண்கிறார். மதியம், 3:00 மணிக்கு காங்கேயத்தில் வரவேற்பை ஏற்றுவிட்டு, மாலை, 4:00 மணிக்கு தாராபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ராகுல் வரும் சாலை, பேசும் இடங்களை, தமிழக காங்., தலைவர் அழகிரி, முன்னாள் தலைவர் இளங்கோவன், நிர்வாகிகள் பார்வையிட்டனர். ஈரோடு மாவட்ட ஏற்பாடுகளை, மாநகர மாவட்ட தலைவர் ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் செய்து வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X