மேட்டூர் அணை நீர்திறப்பு அதிகரிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
மேட்டூர் அணை நீர்திறப்பு அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:52

மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, வினாடிக்கு, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், அணைக்கு, நேற்று வினாடிக்கு, 1,356 கனஅடி நீர் வந்தது. டெல்டா மாவட்டங்களில், மழை தீவிரம் அடைந்ததால், வினாடிக்கு, 2,000 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்திறப்பு, கடந்த, 4ல் நிறுத்தப்பட்டு, குடிநீருக்கு, 500 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. மழை தீவிரம் குறைந்து, பாசன நீர் தேவை அதிகரித்ததால், மேட்டூர் அணை நீர்திறப்பு, நேற்று காலை, 9:00 மணி முதல், வினாடிக்கு, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 105.96 அடியாக இருந்தது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X