கூலமேடு ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்: 27 பேர் காயம்; பார்வையாளர்கள் உற்சாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
10:53

ஆத்தூர்: கூலமேடு ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகளால், பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அதேநேரம், வீரர்கள் உள்பட, 27 பேர் காயம் அடைந்தனர்.


பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம், ஆத்தூர், கூலமேட்டில், நேற்று காலை, 9:30 மணிக்கு, ஜல்லிக்கட்டு விழா நடந்தது. வாடிவாசலுக்கு கொண்டு வந்த கோவில் காளைகள் மீது, பூக்கள் தூவி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கலெக்டர் ராமன், மாவட்ட எஸ்.பி., தீபாகானிகேர், ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தனர். 652 காளைகள், 300 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலில், ஊர் காளைகளை, வாடிவாசல் வழியாக அனுப்பினர். தொடர்ந்து, சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை பகுதிகளை சேர்ந்த காளைகள், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அதன் திமிலை பிடித்து, வீரர்கள் தொங்கினர். பலர் தூக்கி வீசப்பட்டனர். இழுகயிறுடன் வந்த காளைகளால், சிலர் கயிற்றில் சிக்கி காயமடைந்தனர். பின், இழுகயிறுடன் காளையை விடக்கூடாது என, கலெக்டர் ராமன் எச்சரித்தார்.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரனின் காளைக்கு, ஒரு லட்சம் ரூபாய், ஒரு கிலோ வெள்ளி, சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அந்த காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றதால், உரிமையாளருக்கு, பணம், பரிசுகள் கிடைத்தன. வீரர்களை பந்தாடிய, மற்றொரு காளையின் உரிமையாளருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனால், பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் மூன்று காளைகளும், வீரர்களிடம் பிடிபடாததால், சிறப்பு பரிசுகள் கிடைத்தன. அதேபோல், அடங்காத காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, பணம், வெள்ளி காசு, குத்துவிளக்கு, சைக்கிள், பாத்திரம், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை, 4:30 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. இதில், இழு கயிற்றில் சிக்கி, சேந்தமங்கலத்தை சேர்ந்த வீரர்கள் தீபன், 19, தம்மம்பட்டி சவுந்தரபாண்டியன், 24, மாடு உரிமையாளர் ரங்கநாதன், 60, பார்வையாளர்கள் உள்பட, 27 பேர் காயமடைந்தனர். தீபன், சவுந்தரபாண்டியன், ரங்கநாதன் மட்டும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள், முதலுதவி சிகிச்சை மட்டும் எடுத்துக்கொண்டனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X