17 ஆண்டாக தொடரும் மழைநீர் சேகரிப்பு: முன்னுதாரணமாக திகழும் தந்தை மகன் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
17 ஆண்டாக தொடரும் மழைநீர் சேகரிப்பு: முன்னுதாரணமாக திகழும் தந்தை மகன்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

25 ஜன
2021
17:49
பதிவு செய்த நாள்
ஜன 25,2021 01:44

விருதுநகர் மாவட்டம் இயல்பிலே வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு நிலவும் குடிநீர்

பற்றாக்குறை பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி குடிநீருக்காக மக்கள் தெரு, தெருவாய் அலைகின்றனர். இதை தடுக்க மழைநீர் சேகரிப்பு மூலம் குடிநீரை தன்னிறைவு செய்து கொள்ளலாம் என விருதுநகரை சேர்ந்த தந்தை, மகன் நிருபித்துள்ளனர்.



இங்குள்ள நாராயணமட தெருவை சேர்ந்த நாகராஜன், மகன் அன்புமகேசன் இருவரும் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லுாரி அருகே சிவசக்தி சிமென்ட் ஒர்க்ஸ், கடையை நடத்தி வருகின்றனர். பணியிடம், வீடு என இரண்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் சேகரித்து வருகின்றனர். பணியிடம் பகுதியில் 4500 லிட்டர் தொட்டி , வீட்டில்

2 ஆயிரம் லிட்டர் தொட்டியிலும் மழைநீர் சேகரிக்கின்றனர்.



மேற்கூரைகளில் விழும் நீர் வீணாகாமல் நேரடியாக குழாய்கள் வழியாக ஜல்லிகற்கள் மூலம் வடிகட்டப்பட்டு தொட்டிகளுக்கு செல்கிறது. இதை குடிநீராகவும், புழக்கத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள நீரில் மரங்களும் வளர்த்து வளாகத்தையே இயற்கை சூழலில்

வைத்துள்ளனர். 17 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீரையே பயன்படுத்தி வருவதாக பெருமிதம் கொள்கின்றனர் இவர்கள்.



பாராட்ட 92454 77360.



தன்னிறைவு காண்கிறோம்





பொதுவாக மக்கள் உள்ளாட்சி அமைப்புகள் தான் குடிநீர் தருகிறதே நமக்கு எதற்கு மழைநீர் என நினைக்கின்றனர். இதனால் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, வடிகால் இருந்தும் அவை

அனைத்தும் சாக்கடையில் போய்தான் முடிகிறது. அரசு உத்தரவுக்கு பின் பலருக்கும்

விழிப்புணர்வு வந்தும் மழைநீர் சேமிக்க தயங்குகின்றனர்.நாங்கள் ஆழ்துளை குடிநீரை

பயன்படுத்துவதே இல்லை. மழைநீர் மூலம் தன்னிறைவு காண்கிறோம்.



அன்புமகேசன்,



சிவசக்தி சிமென்ட் ஒர்க்ஸ்.


பூமியின் ரத்தம் நீர்





நம் உடலுக்கு எப்படி ரத்தமோ அதே போல் தான் நம் பூமியின் நீர். தேவையின்றி அதை உறிஞ்சி வீணாக்க கூடாது. மழை என்பது கடவுள் நமக்காக வானத்தில் இருந்து தரும் வரம். அதை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். எங்கள் கடைக்கு சிமெண்ட் பொருட்கள் வாங்க வருவோரிடமும் மழைநீர் சேகரிக்க அறிவுறுத்துவோம். அதற்கான
வழிமுறைகளையும் கூறுகிறோம்.



பி.நாகராஜன்,



சிவசக்தி சிமென்ட் ஒர்க்ஸ்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X