பொன்னேரி- பொன்னேரி அடுத்த, பிரளயம்பாக்கம் கிராமத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானபிரசன்னாம்பிகை தாயார் சமேத காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் புனரமைத்து, குடமுழக்கு விழா நடத்தி திட்டமிடப்பட்டு, ஆதிசிவன் அறக்கட்டளை சார்பில், நேற்று திருப்பணிகள் துவங்கின.கோவில் திருப்பணிகள், 70 லட்சம் ரூபாயில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான வாஸ்து பூஜை நேற்று நடந்தது.பூஜையில், பூமாத்தம்மன் சித்தர் பீடத்தின் வடபாதி ஆதீனம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னதாக காளத்தீஸ்வரர், ஞானபிரசன்னாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கொண்டு வந்த அடிகற்களை வைத்து பணிகள் துவங்கப்பட்டன.