எம்.கே.பி.நகர் - துத்தநாகம் தொழிற்சாலை விவகாரத்தில், இந்திய கம்யூ., பிரமுகர் ஒருவர், மற்றொரு கட்சி பிரமுகருக்கு லஞ்ச தர அழைத்த ஆடியோ, வைரலாக பரவுகிறது.சென்னை, வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் சேவியர்; சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொது செயலர்.இவர், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:வியாசர்பாடி, கூட்டுறவு தொழிற்பேட்டையில் செயல்படும், டி.எம்.ராதாகிருஷ்ணன் செட்டி தொழிற்சாலையில், துத்த நாகத்தை பயன்படுத்தி, முலாம் பூசும் பணி நடக்கிறது. 2017 முதல், இந்நிறுவனத்தால் நச்சுப்புகை வெளியேறி, சுற்று வட்டார மக்கள் பாதிக்கப்படுகிறோம்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புகாரளித்தும் பயனில்லை. இந்நிலையில், இந்திய கம்யூ., வடசென்னை மாவட்ட துணை செயலர் வசந்தகுமார், கடந்த 8ம் தேதி, மொபைல்போனில் மிரட்டல் விடுத்தார். அத்துடன், துத்தநாகம் கம்பெனி உரிமையாளர், எனக்கு லஞ்ச தர அழைத்ததாக தெரிவித்தார். இது, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்திய கம்யூ., பிரமுகர் வசந்தகுமார், லஞ்ச கொடுக்க சேவியரை அழைத்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.