கீழ்ப்பாக்கம்; பல லட்சம் செலவு செய்து படிக்க வைத்த தன்னை ஏமாற்றியதாக, பெண் வழக்கறிஞரை வெட்டிய நபர், போலீசில் சரணடைந்தார்.அயனாவரம், பழநி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் அனுஜா, 28; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர், நேற்று கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.அங்கு வந்த வடபழநி, அழகிரி நகரை சேர்ந்த கரீம் முல்லா, 50, என்பவர், அனுஜாவின் வலது கையில், 4 இடங்களில் வெட்டி விட்டு, கீழ்ப்பாக்கம் போலீசில் சரணடைந்தார். அனுஜா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கரீம் முல்லா அளித்த வாக்குமூலம்:நான், தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்த போது, அதே நிறுவனத்தில், 2015ல், அனுஜா அலுவலக வேலைக்காக சேர்ந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தனியார் சட்டக் கல்லுாரியில் சேர்த்து, 20 லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்க வைத்தேன்.தற்போது, முத்து என்பவருடன், அனுஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. என்னை ஏமாற்றியதால், அனுஜாவை வெட்டினேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.