காலம் தாழ்ந்து கிடைத்த கவுரவம் தியாகிக்கு கிடைத்தது அங்கீகாரம் | சென்னை செய்திகள் | Dinamalar
காலம் தாழ்ந்து கிடைத்த கவுரவம் தியாகிக்கு கிடைத்தது அங்கீகாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
07:32

சென்னை : சென்னையில் வசிக்கும், 99 வயது முதியவருக்கு, 23 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின், சுதந்திர போராட்ட தியாகிக்கான அங்கீகாரம் கிடைத்தது; அரசின் சார்பில் அதற்கான கவுரவமும் அளிக்கப்பட்டது.



ஆண்டு தோறும், குடிரயசு தின விழாவில், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசு சார்பில் கவுரவிக்கப்படுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால், இந்த ஆண்டு, தியாகிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களை கவுரவிக்க அரசு அறிவுறுத்தியது.அதன்படி, சென்னையில் வசிக்கும், 16 தியாகிகளுக்கு, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று, பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி, நேற்று கவுரவித்தனர்.



இவர்களில், வியாசர்பாடியைச் சேர்ந்த, 99 வயது முதியவரான கபூருக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் சுதந்திர போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கவும், அரசாணை வெளியிடப்பட்டது. 23 ஆண்டுகள் நடத்திய சட்ட போராட்டத்தின் பலனாக, முதல் முறையாக, தமிழக அரசின் சார்பில் கபூர் நேற்று கவுரவிக்கப்பட்டார். பெரம்பூர் தாசில்தார், அவரின் வீட்டிற்கு சென்று கபூரை கவுரவித்தார்.



இதுகுறித்து, கபூரின் மகன் யாகூப், 44, கூறியதாவது:அரசின் இந்த கவுரவிப்புகாக, 1997ல் இருந்து, 23 ஆண்டுகள் போராடினோம்; ஓய்வூதியத்தை எதிர்பார்க்கவில்லை. இத்தனை ஆண்டுகள், அரசின் சலுகையோ, பணத்தையோ நம்பி, நாங்கள் உயிர் வாழவில்லை. தியாகி என்ற அங்கீகாரம் கிடைத்ததே போதும். அரசாணை வெளியிட்டும், இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. எனது மகனை நாட்டிற்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர்ப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X