நாட்டின், 72வது குடியரசு தின விழாவான நேற்று, டில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையகத்தில், அதன் மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன ராவ் தேசிய கொடி ஏற்றினார்.நிகழ்ச்சியில், மல்லிகார்ஜுன ராவ் பேசியதாவது: நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, பல்வேறு தியாகங்களை செய்துள்ள ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.கொரோனா அச்சுறுத்தலால், உலகெங்கும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவ, முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.கிராமங்கள் வரை வங்கி சேவையை கொண்டு சென்றதில், பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து தொடர்ந்து தரமான சேவையை வழங்கி வருகிறோம். இவ்வாறு, அவர்பேசினார். நிகழ்ச்சியில், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
- நமது நிருபர் -