சென்னை:
வேலை வாய்ப்பற்றோர், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக அரசு சார்பில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதில், 10ம் வகுப்பு, பிளஸ் - 2, பட்டப்படிப்பு படித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, வேலை வாய்ப்பற்றோர், சாந்தோம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், விண்ணப்பதாரர், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில், உரிய விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.