தாம்பரம்: தி.மு.க., இளைஞரணி அமைப்பாளரின் கடையில், மொபைல் போன் மற்றும் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர், சதீஷ்குமார், 34. தாம்பரம், 5வது வட்ட, தி.மு.க., மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், செல்வகுமார் வீட்டின், கீழ் பகுதியில், மொபைல் போன் மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சதீஷ்குமார் வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றார். நேற்று அதிகாலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து, போலீசுக்கு தகவல் தரப்பட்டது.கடையில் இருந்த, மூன்று மொபைல் போன்கள் மற்றும் 5,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.