கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வாரியம் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
07:40

கண்ணகிநகர்: கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 2016ம் ஆண்டுக்கு முன் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, கிரைய பத்திரம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய, வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.



கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து, 704 வீடுகள் உள்ளன. கண்ணகிநகர், எழில்நகர், சுனாமி குடியிருப்பு என, பிரித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதில், கண்ணகிநகர் மற்றும் எழில்நகரில், விலை நிர்ணயம் மற்றும் வாடகை பிரிவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 2016ம் ஆண்டுக்கு முன், ஒதுக்கீடு பெற்று, நிலுவை தொகை செலுத்தியோருக்கு, கிரைய பத்திரம் மற்றும் வரண்முறை என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.கிரைய பத்திரம் மற்றும் பெயர் மாற்றம் பெற, எஸ்டேட் அதிகாரி, குடிசை மாற்று வாரிய அலுவலகம், கண்ணகிநகர் என்ற முகவரியில், நேரில் மனு கொடுக்க வேண்டும் என, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


தேவையான ஆவணங்கள்


*கிரைய பத்திரம் பெற, குடியிருப்புக்கான ஒதுக்கீடு அசல் ஆணை, பணம் செலுத்திய அசல் ரசீதுகள், ஆதார், வாக்காளர், மின் இணைப்பு, எரிவாயு அட்டைகளின் நகல் மற்றும் போட்டோ இணைக்க வேண்டும்.


* வாரிசு முறையில் கிரைய பத்திரம் பெற, ஒதுக்கீடு அசல் ஆணை, ஒதுக்கீடுதாரரின் இறப்பு மற்றும் வாரிசு சான்று, பணம் செலுத்திய அசல் ரசீதுகள், வசித்து வரும் வாரிசுதாரரின் ஆதார், வாக்காளர், மின் இணைப்பு, எரிவாயு அட்டைகளின் நகல் மற்றும் போட்டோ இணைக்க வேண்டும்.



*ஒதுக்கீடுதாரரிடம் இருந்து விலைக்கு வாங்கி, வசித்து வருபவர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு, விலைக்கு வாங்கிய அசல் பத்திரம், ஒதுக்கீடுதாரரிடம் இருந்து வாங்கிய ஒதுக்கீடு அசல் ஆணை, பணம் செலுத்திய அசல் ரசீதுகள், குடியிருப்பதை உறுதி செய்ய ஆதார், வாக்காளர், மின் இணைப்பு, எரிவாயு அட்டைகளின் நகல் மற்றும் போட்டோ இணைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X