தாம்பரம் : தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாவதி, 31. திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சித்தாலப்பாக்கம், டி.என்.எச்.பி., காலனியைச் சேர்ந்த கார்த்திக், 35, என்பவருடன் திருமணம் நடந்தது.
இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹேமாவதி நேற்று முன்தினம் இரவு, வீட்டிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.