கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறித்த விபரம், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதிக்கு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், பர்கூர் தொகுதிக்கு, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்யலட்சுமி, கிருஷ்ணகிரி தொகுதிக்கு, ஆர்.டி.ஓ., கற்பகவள்ளி, வேப்பனஹள்ளி தொகுதிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், ஓசூர் தொகுதிக்கு, ஆர்.டி.ஓ., குணசேகரன், தளி தொகுதிக்கு, உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.