கிருஷ்ணகிரி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பர்கூரில், இ.கம்யூ., கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க வட்ட செயலாளர் முனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணு, கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற, வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.