குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு சுவாமிகள் சந்திப்பு, 5:00 மணியிலிருந்து, 6:00 மணிக்குள் கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. குளித்தலை, திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, முசிறி சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நாளை காலை, 10:00 மணியளவில் சுவாமிகள் சந்திப்பு, தீபாராதனை, சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது.