கரூர்: 'தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: குளித்தலை கடம்பனேஸ்வரர், புகழிமலை, வெண்ணைமலை, பாலமலை ஆகிய கோவில்களில், தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. இங்கு, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், தொடர் காய்ச்சல், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் போன்ற இணைநோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயத்திற்குட்பட்ட குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டும். வரிசையில் நிற்கும்போது குறைந்தது, 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். எந்த ஒரு நோய் அறிகுறி தென்பட்டாலும் மாநில, மாவட்ட உதவி மையத்திற்கு, உடனுக்குடன் தெரிவித்து சோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் முடி திருத்த நிலையங்களுக்கென அரசால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.