கரூர்: கரூர் அருகே, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பஞ்சாயத்தில், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, பி.காளிப்பாளையம், சீத்தகாட்டூர், பெரிய கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், தார்ச்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, 74 லட்சத்து, 20 ஆயிரத்து, 486 ரூபாய் மதிப்பில் பணிகள் மேள்கொள்ளப்பட உள்ளன. பஞ்., தலைவர் சாந்தி, துணைத்தலைவர் நல்லுசாமி, மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் கருணாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.