கரூர்: கரூர் அருகே திருகாம்புலியூரில், போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, வடிகால் வசதி இல்லை. இதனால், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. அப்பகுதியில், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, போர்வெல் குழாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.