கேன்டீன் அறை மூடல்; ரயில் பயணிகள் அவதி | கரூர் செய்திகள் | Dinamalar
கேன்டீன் அறை மூடல்; ரயில் பயணிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
11:46

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கேன்டீன் அறை மூடப்பட்டது. இதனால், பயணிகள் அமர்ந்து சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள், பல்வேறு பணிகள் காரணமாக கரூருக்கு ரயிலில் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக, ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் வசதி மற்றும் அமர்ந்து சாப்பிட வசதியாக தனியாக அறை இருந்தது. இந்நிலையில், கடந்தாண்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே, கேன்டீன் அறையை வணிகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மூடி விட்டனர். இதனால், கேன்டீனில் உணவுப் பொருட்களை வாங்கும் பயணிகள் அமர்ந்து சாப்பிட முடியாமல், நின்று கொண்டே சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே சாப்பிடுகின்றனர். தற்போது, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் நிலையில், வரும் பிப்ரவரி முதல், ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டால், வழக்கமான முறையில் ரயில்கள் இயக்கப்படும். எனவே, பயணிகள் நலன் கருதி, கேன்டீன் அறையை திறக்க, ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X