பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
03:26

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 44; பனியன் தொழிலாளி. இவரது கணவர் கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். அதன்பின், மதுரையை சேர்ந்த பழனிசெல்வன், 46 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். தற்போது, பாக்யலட்சுமிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த பழனிசெல்வன் அரிவாளால் பாக்யலட்சுமியை வெட்டினார். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்துக்குளி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கிளி பிடிக்க சென்றவர் பலிமேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர், லட்சுமண் கராமி, 31. குண்டடம் அருகே, காசிலிங்கம்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில், பணிபுரிந்து வந்தார். கோழிப்பண்ணை அருகே, பட்டுப்போன பனைமரம் உள்ளது. கிளி பிடிப்பதற்காக மரத்தின்மீது ஏறியபோது, மரம் சரிந்து விழுந்தது; இதில் பலத்த காயமடைந்தவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் ஒருவர் பலிகோபி - காசிபாளையத்தை சேர்ந்தவர், மணி. இவரது மகன் சுரேஷ், 35; மனைவி சுமதி,30. காட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கின்றனர். சந்திராபுரம் அருகேயுள்ள பனியன் நிறுவனத்தில், சுரேஷ் பணிபுரிகிறார். இவர், நேற்று மதியம், செவந்தாம்பாளையம் வழியாக, சந்திராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். எதிரே வந்த சரக்கு வாகனம், மோதியது. இதில், சுரேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X