அத்திக்கடவு திட்டத்தில் 72 சதவீத பணிகள் நிறைவு: அடுத்த மாதம் 61 குளங்களில் நீர் நிரப்ப திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
23:33

அன்னூர்:'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், 72 சதவீத பணிகள் முடிந்துள்ளன; அடுத்த மாதம் பெருந்துறையில், 61 குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், ஆறு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் ஆறாவது நீரேற்று நிலையம், அன்னுார் அருகே குன்னத்துாராம்பாளையத்தில் கட்டப்பட்டு வருகிறது. பணியை, சபாநாயகரும், அவிநாசி எம்.எல்.ஏ., வுமான தனபால் ஆய்வு செய்தார். அத்திக்கடவு திட்ட பொறியாளர்கள் கூறியதாவது:பவானி ஆற்றில், ஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ் புறத்தில் இருந்து, ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., உபரி நீர் நீரேற்று முறையில் நிலத்தடி குழாய் வாயிலாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 1,044 குளம், குட்டைகளில் நிரப்பப்பட உள்ளது. இதன் வாயிலாக, 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும்.இதுவரை, 550 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, அடுத்த மாதம் திருப்பணை மற்றும் முதல் மூன்று நீரேற்று நிலையங்களில் பணி முடித்து, பெருந்துறையில் பகுதியில் உள்ள, 61 குளம், குட்டைகளில், நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தில் இதுவரை, 1,137 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; 72 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.அவிநாசி தொகுதியில், அன்னுார் ஒன்றியத்தில், 186 குளம், குட்டைகளும், அவிநாசி ஒன்றியத்தில், 255 குளம், குட்டைகளும் என, 441 குளம், குட்டைகளில் திட்டத்தில் நீர் நிரப்பப்பட உள்ளது.இதன் வாயிலாக, 9,480 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். அன்னுாரில் உள்ள நீரேற்று நிலையத்தில், 35 சதவீத கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.நேற்று முன் தினம் பணிகளை பார்வையிட்ட, சபாநாயகர் தனபால், விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 'திட்டமிடப்பட்ட 24 மாத காலத்துக்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை, 550 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, அடுத்த மாதம் திருப்பணை மற்றும் முதல் மூன்று நீரேற்று நிலையங்களில் பணி முடித்து, பெருந்துறையில் பகுதியில் உள்ள, 61 குளம், குட்டைகளில், நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தில் இதுவரை, 1,137 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; 72 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X