கடந்து போனது; மறந்து போகவில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2021
00:17

கடந்தாண்டு, இதே நாள் (பிப்.,20)...ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டு, 48 பேர், வால்வோ சொகுசு பஸ்சில், பெங்களூருவில் இருந்து, திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஆழ்ந்த உறக்கத்தில் அனைவரும் பயணிக்க, அதிகாலை, 4:00 மணிக்கு அவிநாசி - கோவை பைபாஸ் ரோட்டில், கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, பஸ் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது.


விபத்தில், 16 பேர் அதே இடத்திலும், மூன்று பேர் மருத்துவமனையிலும் பலியாயினர். நாடு முழுதும் இந்த விபத்து, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கன்டெய்னர் லாரி டிரைவர், துாக்க கலக்கத்தில் இருந்ததே, விபத்துக்கான காரணம் என தெரிய வந்தது.வெறும் மூன்று கி.மீ., துாரமே இருந்த, அவிநாசி அரசு மருத்துவமனையில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கவோ, இறந்தவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யவோ முடியவில்லை. இதனால், 18 கி.மீ., துாரமுள்ள திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிஇருந்தது.


இதற்கு காரணம், அவிநாசி மருத்துவமனையில், உரிய கட்டமைப்பு இல்லாததே காரணம். இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தியே ஆக வேண்டும் என்ற, அவசியம், உணரப்பட்டது. கட்டமைப்பை மேம்படுத்தி, பல்வேறு சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தினர்.அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.தினசரி, 700 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.


இங்கு, 42 படுக்கை மட்டுமே உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த இம்மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது இருப்பினும் அதற்கேற்ப கட்டடங்கள் கட்டப்படவில்லை; மருத்துவ சேவை விரிவுபடுத்தப்படவில்லை.இம்மருத்துவமனை, கோவை --- திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால், அடிக்கடி நிகழும் வாகன விபத்தில் சிக்கிய பலர், சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.என்ன வசதி தேவை?''ஆறு படுக்கை கொண்ட அவசர கால வார்டு, ஆறு படுக்கை கொண்ட ஐ.சி.யு., நவீன ஆய்வுக்கூடம், ரத்த சேமிப்பு அறை, 30 படுக்கை கொண்ட குழந்தைகள் வார்டு, வெளி நோயாளிகளுக்கான சிறப்பு அறை, மகப்பேறு மற்றும் குழந்தை நலன் சார்ந்த, 24 மணி நேர சேவை மையம், தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன அறுவை அரங்கு, நவீன சமையலறை, ஆண், பெண்களுக்கென தனி தனி வார்டு, குளிர்பதன வசதியுடன் கூடிய பிணவறை, கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.


120 படுக்கை வசதி கொண்ட விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்வைத்துள்ளனர்.இதற்கிடையில் மத்திய குடும்ப நலத்துறை, இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையம் துவங்க, ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம், விபத்துகளில் சிக்குவோர், உடனடியாக சிகிச்சை பெற முடியும் என்பதால், உயிர்ப்பலிகள் தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்தது.மருத்துவ பணிகள் துறையினர் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஐந்து கி.மீ., தொலைவிற்குள் உள்ள அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க விதி உள்ளது என்ற அடிப்படையில் தான், அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம், இங்கு விரைவில் சிகிச்சை மையத்தை உருவாக்க வழி ஏற்பட்டுள்ளது,' என்றனர்.இதுவரை அறிவிப்பு அளவில் மட்டுமே உள்ள இத்திட்டம் நடைமுறைக்கு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


ஓட்டு வங்கி தான் கட்சிகளுக்கு முக்கியம்!


தேர்தல் பிரசாரத்துக்கு வரும் ஆளுங்கட்சி தலைவர்கள் அத்திக்கடவு திட்டத்தை மட்டுமே முன்னிறுத்தியும், செய்து முடித்த வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பிரசாரம் செய்கின்றனரே தவிர, மருத்துவமனை மேம்பாடு குறித்து வாய் திறப்பதில்லை. எதிர்க்கட்சி தரப்போ, ஆளுங்கட்சியை குறை சொல்வதில் மட்டுமே கவனமாக உள்ளனரே தவிர, உயிர் காக்கும் மருத்துவமனை மேம்பாடு குறித்து, கவலை கொள்வதாக தெரியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே நடத்தும் அரசியல் கட்சிகள், மக்கள் நலன் சார்ந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.-- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X