மாநில கபடி போட்டி; திருப்பூர் அணி பயணம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மாநில கபடி போட்டி; திருப்பூர் அணி பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 பிப்
2021
00:18

திருப்பூர்:மாநில கபடி போட்டிக்கு செல்லும் திருப்பூர் மாவட்ட அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் மூன்று நாள் மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி இம்மாதம், 19 முதல், 21 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட அணிக்கு நான்கு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தேர்ச்சி பெற்ற, 15 வீரர்களுக்கு வழியனுப்பு விழா, மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். தலைவர் மனோகரன், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தனர். கபடி சர்வதேச நடுவர் முத்துசாமி வரவேற்றார்.முதுகுளத்துார் மாநில போட்டியில் பங்கேற்க செல்லும் வீரர்களுக்கு சீருடை, ஷூ, பனியன், டிராக் ஷீட் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் சுப்ரமணியம், கவுரவ உறுப்பினர் பிரேமாமணி, இணை செயலாளர் சின்னு, தேர்வுக்குழு தலைவர் ருத்திரன், வளர்ச்சிக்குழு கன்வீனர் காரல்மார்க்ஸ் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் தம்பி சண்முகம், தங்கராஜ், நடுவர் குழு சேகர் பங்கேற்றனர். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X