சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு வெள்ளாறு வடக்குராஜன் வாய்க்கால் கரை சாலையில் பிளவு ஏற்பட்ட சாலை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.சென்னை-கும்பகோணம் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு வடக்குராஜன் வாய்க்கால் கரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக மழையினால் சாலை உள்வாங்கி பிளவு ஏற்பட்டது.பிளவு ஏற்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினால் சீரமைக்காமல் விட்டுள்ளனர்.இது குறித்து கடந்த மாதம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். சாலை பிளவு பட்ட இடத்தில் வாகனங்கள் சைடு வாங்கி செல்லமுடியாத நிலையில் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பிளவை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.