கருமாத்துார் : பெண் சிசுக்கொலை நடப்பதற்காக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும் என கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் நடந்த சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு பயண துவக்க விழாவில் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் வேதனை தெரிவித்தார்.
கல்லுாரி கிராம கல்வித்திட்டம், போலீஸ் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலம், வருவாய், சமூக நலம், பள்ளிக்கல்வித்துறை, சுகாதார நலப் பணிகள், போர்டு அமைப்பு சார்பில் விழா நடந்தது.அரைஸ் விரிவாக்க துறை இயக்குனர் லாசர் வரவேற்றார்.
கல்லுாரி அதிபர் ஜான்பிரகாசம், செயலர் கில்பர்ட் கமிலஸ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பண்டியராஜா, சண்முகம், சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், தாய்சேய் அலுவலர் செல்வகாமாட்சி, சமூக நல அலுவலர் புஷ்பகலா, டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆர்.டி.ஓ., பேசியதாவது: அரசு, அரசியல் என பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. இந்த சூழலிலும் பெண் சிசுக் கொலை நடப்பதற்கு இடம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் உள்ளதற்காக வருத்தப்பட வேண்டும். நாம் என்ன செய்யமுடியும் என்று கேட்பதை விட, நாம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும், என்றார்.