டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாடம் ஆசிரியர்களுக்கு பயிற்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாடம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
00:45

கோவை : டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி, கற்பித்தல் பணிகளை தொடர, ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.



கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டபோது, ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடம் நடத்தியதோடு, டிஜிட்டல் கன்டென்ட் தயாரித்து, மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அனுப்பினர்.சில பள்ளிகள், யு-டியூப் சேனல் துவங்கி, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட கல்வி வீடியோக்கள் பதிவேற்றின. இது தவிர, 'க்யூ.ஆர்.கோடு' மூலமாகவும், மாணவர்களுக்கான கூடுதல் தகவல்கள் பெற, வழிவகை செய்யப்பட்டது.கல்வி சேனலுக்காக, பிளஸ் 2 வரை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் தயாரித்து அனுப்பப்பட்டது. இதை தொகுத்து, தரவுகளாக்கும் பணிகள் நடக்கின்றன.



தொடர்ந்து, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆன்லைன் வகுப்புகள் மூலம், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட சிறந்த வீடியோக்கள், க்யூ.ஆர். கோடு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர்கள் என்ற தளத்தில் பதிவேற்றப் படுகின்றன.பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி, கற்பித்தல் முறைகளை எளிமை யாக்க, பொதுத்தேர்வுக்கு பின், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக, திறன்மிக்க ஆசிரியர்களின் பட்டியல் திரட்டப்படுகிறது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X